
நெல் சந்தைப்படுத்தல் சபையை புறக்கணிக்கும் விவசாயிகள்
நெல் சந்தைப்படுத்தல் சபையானது நெல்லை கொள்முதல் செய்ய ஆரம்பித்து இரண்டு நாட்கள் கடந்துள்ள போதிலும், விவசாயிகள் சபைக்கு நெல்லை விற்பனை செய்யவில்லை என அதன் தலைவர் ஏ. எம். யு. பின்னலந்த இன்று (7) தெரிவித்தார்.
நெல் கொள்முதல் செய்வதற்காக 40க்கும் மேற்பட்ட நெல் களஞ்சியசாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அறுவடை அதிகரிக்கும் போது அரசாங்கத்தின் பங்கு விவசாயிகளால் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கம் போதுமான அளவு நெல்லை வாங்கும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், நெல் மற்றும் அரிசியின் அனைத்து அம்சங்களிலும் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர் நெல்லின் விலை நிர்ணயிக்கப்பட்டதால், அரிசிக்கு அரசாங்கம் விதித்த அதிகபட்ச சில்லறை விலையை மாற்ற வேண்டிய அவசியமில்லை என தலைவர் கூறினார்.
CATEGORIES இலங்கை
