பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 71 ஆகும்.
இந்நிலையில், ஹல்க் ஹோகனின் மறைவு வருத்தமளிப்பதாக WWE அமைப்பு தெரிவித்துள்ளது.
1980ஆம் ஆண்டுகளில் WWE உளகளாவிய அங்கீகாரத்தைப் பெற உதவியர்களில் ஒருவராகத் ஹோகன் திகழ்ந்ததாக அந்த அமைப்பு எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளது.
1953ஆம் ஆண்டும ஜோர்ஜியாவில் (Georgia) பிறந்த ஹோகனின் இயற்பெயர் டெரி ஜீன் போலியா (Terry Gene Bollea) ஆகும்.1980ஆம் ஆண்டுகளில் மல்யுத்த போட்டி பிரபலமடைந்தபோது ஹோகன் புகழ் பெற்றார்.
அப்போதைய உலக மல்யுத்த கூட்டமைப்பின் (WWF) அடையாளமாகவும் அவர் மாறினார். அவரது மிக முக்கியமான வெற்றிகளில் ஒன்று 1987ஆம் ஆண்டு பதிவானது.
அமெரிக்காவின் மிச்சிகனில் (Michigan)நடைபெற்ற WrestleMania III போட்டியில் அவர் மறைந்த ஆண்ட்ரே தி ஜெயண்ட் (Andre the Giant) என்ற மல்யுத்த வீரரைத் தோற்கடித்தார்.
அது மல்யுத்த போட்டி வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற தருணங்களில் ஒன்றாக மாறியது. மேலும், மல்யுத்தம் தவிர்த்து ஹோகன் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
“Rocky III”, “Santa With Muscles” போன்ற திரைப்படங்கள் அவர் நடித்த முக்கிய திரைப்படங்கள் ஆகும். எவ்வாறாயினும், அவரது நடிப்புத் தொழில் அவரது மல்யுத்த புகழுக்கு ஈடாகவில்லை.
ஹல்க் ஹோகன் WWE Hall of Fame அங்கீகாரத்தை இரண்டு முறை பெற்றுள்ளார் என்பதுடன் அவர் இரு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.