பிரபல ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் சடலமாக மீட்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் சடலமாக மீட்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் (95) மற்றும் அவரது மனைவி பியானோ கலைஞர் பெட்சி ஆகியோர் நியூ மெக்ஸிகோவில் உள்ள அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர.

ஜீன் ஹேக்மேன் இரண்டு முறை ஆஸ்கார் விருது வென்றவர் ஆவர். 1972 ஆம் ஆண்டு ‘தி பிரஞ்சு கனெக்ஷன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஓஸ்கார் விருதை வென்றார்

. ‘போனி அண்ட் கிளைட்’ மற்றும் ‘தி ராயல் டெனன்பாம்ஸ்’ படங்களில் அவரது நடிப்புகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.

கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் ‘அன்ஃபர்கிவன்’ (1992) படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஓஸ்கார் விருதையும் அவர் வென்றிருந்தார்.

1967 ஆம் ஆண்டு வெளியான ‘போனி அண்ட் கிளைட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

கலிபோர்னியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஜீன் ஹேக்மேன், ஜனவரி 30, 1930 அன்று பிறந்தார். ஹேக்மேன் தனது பதினாறு வயதில் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார்.

மேலும் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பில் பட்டம் பெறுவதற்கு முன்பு சீனா, ஜப்பான் மற்றும் ஹவாய் ஆகிய நாடுகளில் நான்கரை ஆண்டுகள் பணியாற்றினார்.

அவரது குறிப்பிடத்தக்க படங்களில் ‘யங் ஃபிராங்கண்ஸ்டைன்’ (1974), ‘நைட் மூவ்ஸ்’ (1975), ‘பைட் தி புல்லட்’ (1975), மற்றும் ‘சூப்பர்மேன்’ (1978) ஆகியவை அடங்கும்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவரின் கடைசி திரைப்படம் ‘வெல்கம் டு மூஸ்போர்ட்’ ஆகும். இந்நிலையில், மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share This