ஆபத்தான நிலையில் இருந்து மீண்டார் சைஃப் அலி கான்
கத்திக்குத்துக்கு இலக்கான பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் ஆபத்திலிருந்து மீண்டுள்ளதாகவும், அவருக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது கத்திக்குத்து – வைத்தியசாலையில் அனுமதி
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தால் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வீட்டிற்குள் புகுந்த திருடனுடன் ஏற்பட்ட மோதலில் நடிகர் சைஃப் அலி கான் மீது பல முறை கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து சைஃப் அலி கான் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பம் பாலிவுட் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதுடன், அவரது ரசிகர்களையும் கவலையடைச் செய்துள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.