பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார்

பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார்

இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த ஷிஹான் ஹுசைனி கராத்தே மாஸ்டர் என்பதுடன், மேலும் 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமான ஷிஹான் ஹுசைனி, விஜய் நடித்த ‘பத்ரி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஹுசைனி, தனக்கு இரத்தப் புற்றுநோய் மற்றும் அப்லாஸ்டிக் அனீமியா இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

தனது உடல்நிலை குறித்துப் பேசிய அவர், தனது முன்னாள் மாணவர்களான பவன் கல்யாண் மற்றும் விஜய் ஆகியோரிடம் உதவி கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகக் கூறினார்.

மேலும், தனது மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க தனது பயிற்சி மையத்தை விற்க முடிவு செய்துள்ளதாகவும் ஹுசைனி தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகர் ஷிஹான் ஹுசைனி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். உயிரிழப்பை அவரின் குடும்பம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், அவரின் உடல் இன்று மாலை வரை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லமான ஹை கமாண்டில் வைக்கப்பட்டிருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தான் உயிரிழந்த மூன்று நாட்களுக்கு பிறகு, தனது உடலை ஸ்ரீ ராசந்திரா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தானம் செய்ய விரும்புவதாக ஹூசைனி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This