இலங்கை வந்தடைந்தார் பிரபல நடிகர் மோகன்லால்

இலங்கை வந்தடைந்தார் பிரபல நடிகர் மோகன்லால்

பிரபல தென்னிந்திய நடிகர் மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் உள்ளிட்டவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் , ஃபஹத் ஃபாசில் , குஞ்சாக்கோ போபன் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகளின் பங்கேற்புடன் உருவாகும் படத்தின் காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படவுள்ளன.

இந்நிலையில், மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் உள்ளிட்டவர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-166 மூலம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்த இரண்டு பிரபல நடிகர்களும் கொச்சினில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வெளிநாட்டு திரைப்படப் பிரிவின் அதிகாரிகள் குழு அவர்களை வரவேற்றிருந்தனர்.

மகேஷ் நாராயணனின் இந்தப் படத்தின் எட்டாவது கட்டம் இலங்கையில் படமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எட்டாம் கட்ட படப்பிடிப்பில் மோகன்லால், குஞ்சாக்கோ போபன், ஃபகத் பாசில் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் படமாக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெரிய பட்ஜெட் படத்திற்கான காட்சி அமைப்புகளை பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் படமாக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Share This