முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி
![முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி](https://oruvan.com/wp-content/uploads/2025/02/25-67a9759eccd88.jpg)
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலை குறைவடைந்துள்ளதாக கோழி தொடர்பான உற்பத்தி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முட்டை ஒன்றின் விலை 30 ரூபாவாக காணப்படுவதாகவும் பல்பொருள் அங்காடிகளில் கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 750- 850 ரூபாவுக்கும் இடையே காணப்படுவதாகவும் கோழி தொடர்பான உற்பத்தி விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏனைய சில்லறை விற்பனை நிலையங்களில் கோழி இறைச்சி 900 ரூபாவாக குறைலடைந்துள்ளதாகவும், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி 1,000- 1,100 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.