
துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலவகாசம் நீடிப்பு
நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு மாதத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2025 செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மட்டுமே உரிமங்களைப் புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்ததாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருப்பது, துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22 வது பிரிவின் விதிகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
