அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு

இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்கபட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (20) நிறைவடையவிருந்தது.

தற்போது வரையில் தனியார் இறக்குதியாளர்கள் மூலம் 35,600 மெட்றிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் மூலம் அரிசி இறக்குமதி செய்யப்படும் என அறிவித்திருந்தாலும் கூட நேற்று வரையில் (19) அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share This