எதிர்பார்த்த நெல் அறுவடை கிடைக்கவில்லை – மீண்டும் அரிசி இறக்குமதி

எதிர்பார்த்த நெல் அறுவடை கிடைக்கவில்லை – மீண்டும் அரிசி இறக்குமதி

இந்த ஆண்டு பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட நெல் அறுவடை குறைந்துள்ளதாக வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பெரும்போகத்தில் இரண்டரை மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 2.4 மில்லியன் மெற்றித் தொன் மட்டுமே அறுவடை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மற்றும் வெள்ளம் நெல் அறுவடையை பாதித்துள்ளது.

இந்த சூழ்நிலையால் அரிசிக்கு சந்தையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், மக்களுக்கு அரிசியை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பது தவிர்க்க முடியாதது. இதனால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share This