2032 இல் கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்ப்பு

2032 இல் கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்ப்பு

2032 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றிவரும் ஜனாதிபதி இந்த கருத்தை தெரிவித்தார்.

2025 ஆண்டில் இறக்குமதி செலவீனம் அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

அதற்கமைய 430 மில்லியன் அமெரிக்க டொலரால் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு எதிராக எவரேனும் தவறு இழைத்திருப்பார்களாயின், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் இந்த விடயத்தில் யாருக்கும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This