படலந்த ஆணைக்குழு அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் படிக்க வேண்டும்

படலந்த ஆணைக்குழு அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் படிக்குமாறு அனைத்து நாட்டு மக்களையும் அழைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
காலி மாவட்டத்தில் இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை கையளித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நாட்டின் ஒரு சில இடங்களைத் தவிர, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனுக்களை சமர்ப்பிக்காத சில இடங்களுக்கு சுயேச்சைக் குழுக்களாகப் போட்டியிட வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காலி மாவட்டத்தில் உள்ள 19 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.