அமெரிக்கப் பொருள்களுக்கு $28 பில்லியன் வரிவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

அமெரிக்கப் பொருள்களுக்கு $28 பில்லியன் வரிவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியமும் விரைவில் அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதிப்பை அறிவிக்கவிருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 26 பில்லியன் யூரோவுக்கு ($28.33 பில்லியன்) மேலான வரியை விதிக்கப்போவதாக ஐரோப்பிய ஆணையம் புதன்கிழமை அன்று தெரிவித்தது.

எஃகு, அலுமினியம் உள்ளிட்ட அமெரிக்கப் பொருள்களுக்கான புதிய வரி அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும் என்று அது கூறியுள்ளது.

ஏப்ரல் 1 ஆம் திகதி அமெரிக்கப் பொருள்கள் மீதான தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வரி முடிவுக்கு வருவதாகவும் ஏப்ரல் நடுப்பகுதிக்குள் அமெரிக்கப் பொருள்கள் மீதான புதிய வரித் தொகுப்பு முன்வைக்கப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

“புதிய வரி விதிப்பு, அமெரிக்க வரி விதிப்புக்கு இணையாக இருக்கும். இரண்டு அடுக்குகளில் எங்களுடைய பதில் நடவடிக்கை இடம்பெறும். ஏப்ரல் 1ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் திகதிக்குள் முழுமையாக வரி விதிப்பு இடம்பெறும்,” என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வோன் டெர் லேயன் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப், எஃகு மற்றும் அலுமினியத்துக்கு 25 விழுக்காடு வரி உயர்வை அறிவித்திருந்தார். இது, புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

Share This