அனில் அம்பானிக்கு சுவீடன் பெண்ணை பரிந்துரைத்த எப்ஸ்டீன்
ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் பெயரும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு அனில் அம்பானி சென்ற நிலையில் மான்ஹட்டனில் (Manhattan) இல் உள்ள ஜெப்ரியின் வீட்டுக்கும் அவர் சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 09 ஆம் திகதி ஜெப்ரி மற்றும் அனில் அம்பானி இடையே நடைபெற்ற தகவல் பரிமாற்றத்தை அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ளது.
தனக்கான உங்களின் பரிந்துரை என்னவென்று அனில் அம்பானி ஜெப்ரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு “உங்களுக்கு உயரமான சுவீடன் பெண் பொருத்தமாக இருப்பார்’’என ஜெப்ரி பரிந்துரைக்க, ‘‘உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு’’ அனில் அம்பானி பதில் அளித்திருக்கிறார்.
