எப்ஸ்டீன் விவகாரம் – ஹிலாரி கிளிண்டனிடம் விசாரணை

எப்ஸ்டீன் விவகாரம் – ஹிலாரி கிளிண்டனிடம் விசாரணை

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கும் பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுக்கும் இடையில் சில தொடர்புகள் இருந்ததாக வெளியான குற்றச்சாட்டுகளின் பிரகாரம், நியூயோர்க்கின் சாப்பக்வாவில் உள்ள அரங்கம் ஒன்றில் வைத்து ஹிலாரி கிளிண்டனிடம் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர் இரகசியமாக விசாரணை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 06 மணிநேரம் நீடித்த இந்த விசாரணையில், ஹிலாரி கிளிண்டன் தனக்கும் எப்ஸ்டீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“நான் அவரைச் சந்தித்ததே இல்லை; அவருடைய தீவுக்கோ, அலுவலகங்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ சென்றதில்லை” எனவும் ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )