
EPF நிறுவன செயற்பாடு ‘டிஜிட்டல்’ மயமானது
ஊழியர் சேமலாப நிதியத்தின் செயற்பாடுகள் மற்றும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டமானது கொழும்பு, நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் அமைச்சு வளாகத்தில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களை இணையவழியில் பதிவு செய்யும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
