சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் – அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்

சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் – அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்

சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் தொடர்பான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கண்டறிதல், விசாரணை செய்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல் குறித்த சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிறுவர் உரிமைகள் சமவாயத்திற்கமைய 18 வயதுக்குக் குறைவான அனைவரும் சிறுவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.

புதிய புள்ளிவிபரங்களுக்கமைவாக, நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் 30% சதவீதமானவர்கள் சிறுவர்களாவர்.

ஒருசில சிறுவர்கள் பல்வேறு காரணங்களால் ஏதேனுமொரு தொழில் செய்வதற்கு உந்தப்படுவதும், தமது தாய் தந்தையுடன், மனித வியாபாரத்திற்கு இரையாகி வீதியோர சிறுவராக பெற்றோர் அல்லாதவர்களுடன் பொது இடங்களில் யாசகத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், பல்வேறு பொருட்கள் விற்பனையில் ஈடுபடுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல் பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் 16-18 இற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை 2025.07.01ஆம் திகதி தொடக்கம் முழுமையாகத் தடைசெய்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளை அந்தந்த அதிகாரிகள் மூலமாக கடுமையாக அமுல்படுத்துவதற்கும், அதுதொடர்பான விரிவான பரப்புரை வேலைத்திட்டத்தின் மூலம் பொதுமக்களைத் தெளிவுபடுத்துவதற்கும் தமது அமைச்சு திட்டமிட்டுள்ள வேலைத்திட்டம் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சால் சமர்பிக்கப்பட்டுள்ளமையால் குறித்த அமைச்சுக்கு உடன்பாட்டை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This