மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்கு குறையும் – என்கிறார் பிரதி அமைச்சர் சதுரங்க
புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் மேலும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் விரைவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் மின்சாரக் கட்டணங்கள் விரைவில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்படும். மின்சார அமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைச் சேர்ப்பது ஆபத்தானது என்று சிலர் கடந்த காலங்களில் கூறியிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி வெளியிட்டிருந்த கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை அதிகரிப்பதற்கான திட்டங்களை வகுத்து அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அந்த மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படும் போது மின்சாரக் கட்டணம் குறைவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.