மின் கட்டணத்தை குறைக்க முடியும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மின் கட்டணத்தை குறைக்க முடியும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இலங்கை மின்சார சபை இன்னும் ஆறு மாதங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவித்திருந்தாலும் கூட தற்போதைய நிலவரங்கள் மற்றும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை 11 வீதம் தொடக்கம் 23 வீதம் வரையில் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் பிரேரணைக்கு பதிலளிக்கும் வகையில், 11 முதல் 23 வீதம் வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என்ற யோசனையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) பகிரங்கப்படுத்தவுள்ளது.

இதேவேளை,மின்சாரக் கட்டணத்திற்கு பொறுப்பான இரண்டு உயர்மட்ட அமைப்புகளான இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share This