சட்டப்படி வேலை செய்ய தயாராகும் மின்சார ஊழியர்கள்

இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (04) நள்ளிரவு முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக மின்சார சபை ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை பல கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.
அதிகாரிகள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தீவிரமடையும் என்றும் அவர் கூறினார்.