இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (18) காலை கூடியுள்ளது.
நேற்று (17) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு கூடியுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பிலான வர்த்தமானி இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்காத நிலையில் உள்ளூராட்சி அமைச்சினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வர்த்தமானி அறிவித்தல் கிடைத்த பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.