தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் பதிவு

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அதன்படி, நேற்று (30) களுத்துறை பொலிஸ் பிரிவில் அகலவத்த பொலிஸ் பொலிஸ் நிலையத்தில் வாய்மொழி மிரட்டலுக்குட்படுத்தி தாக்குதலுக்கு முற்பட்டமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறல்கள் தொடர்பில் 5 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
குறித்த முறைப்பாடுகள் தலாதுஒய, தணமல்வில, அலுத்கம, மாத்தளை மற்றும் கலேவெல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளன.