முல்லை நகர் வட்டாரத்தில் தேர்தல் பரப்புரைக்கூட்டம்; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட முல்லைநகர் வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக்கூட்டம் நேற்றைய தினம் (01.04.2025) இடம்பெற்றது.
குறித்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைநகர் வட்டார வேட்பாளர் பிரான்சிஸ் சவரி ஜெறோம் திலீபன் அவர்களின் தலைமையில் செல்வபுரம் பகுதியில் இப் பரப்புரைக்கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது முல்லை நகர் வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அமோக வெற்றிபெறச் செய்யவேண்டுமென கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அதேவேளை தமிழரசுக்கட்சி வேட்பாளரது தேர்தல் பரப்புரை துண்டுப்பிரசுரங்களும் இதன்போது மக்களிடம் கையளிக்கப்பட்டன.
மேலும் இப் பரப்புரைக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள், பெருமளவான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.