
டிசம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை நாளை பெற்றுக்கொள்ளலாம்
டிசம்பர் மாதத்திற்கான தபால் அலுவலகங்கள் ஊடாக முதியோர் கொடுப்பனவை இதுவரை பெறாதவர்கள் நாளை பெற்றுக்கொள்ள முடியும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தகுதியானவர்கள் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.
கொடுப்பனவை நாளைய தினம் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் மீண்டும் ஜனவரி மாதம் 05 ஆம் திகதியே அதனை பெற முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
CATEGORIES இலங்கை
