புனித மீலாதுன் நபி தினம் – சர்வமத தலைவர்கள் வாழ்த்து

இன்று, 2025 செப்டெம்பர் 5ஆம் திகதி முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது 1500வது பிறந்த இந்த நன்னாளை முன்னிட்டு, தேசிய சர்வ மத குரு ஐக்கியத்தின் சர்வமத தலைவர்களான சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி பாபுசர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி மற்றும் கலாநிதி நிஷான் சம்பத் குரே பாதிரியார் ஆகியோர் மீலாதுன் நபி (பிறந்த நாள்) வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கருணை, அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் அன்பு நிரம்பிய வாழ்வியல் பாரம்பரியம் இன்று நாம் எதிர்கொள்ளும் சமூக சவால்களுக்கு விடையளிக்கக்கூடிய ஒளியாய் திகழ்கிறது. இது நமக்குத் தேவையான ஒற்றுமை, மதநல்லிணக்கம், மற்றும் பரஸ்பர மதிப்பை வளர்க்கும் வழிகாட்டியாக இருக்கிறது என்ற நம்பிக்கையோடு, இனிய மீலாதுன் நபி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நன்னாளில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உயரிய பண்புகளையும் வாழ்வியல் நெறிகளையும் பின்பற்றி, பல்லின, பலமத சமூகங்கள் வாழும் இலங்கையில், ஒற்றுமை, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தி ஒற்றுமையாக வாழ்வோம் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
(தேசிய சர்வ மத குரு ஐக்கியத்தின் சர்வமத தலைவர்கள்)