இலங்கையில் பல கட்சி ஆட்சி முறையை ஒழிக்க முயற்சி

இலங்கை என்பது நீண்டகாலமாக ஜனநாயகத்தின் வழியில் பயணிக்கும் நாடு. செல்வந்த வர்க்கம் மாத்திரமல்ல சாதாரண மக்களும் ஜனாதிபதியாக முடியும். அப்படிதான் ரணசிங்க பிரேமதாச, மைத்திபால சிறிசேன மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதிகளாக தெரிவாகினர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
எமது நாட்டில் நீண்டகாலமாக பல கட்சி ஆட்சிமுறை உள்ளது. அதனை ஒழிக்க அரசாங்கம் முற்படுகிறது. அதற்கு இடமளிக்க முடியாது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தருணமிது. என்னை கைது செய்வதன் ஊடாக எதிர்க்கட்சியினை அச்சுறுத்த பார்க்கின்றனர். இதற்கு நாம் அச்சப்பட கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறினார்.