
பெருவில் நிலநடுக்கம்
பெருவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் இது 5.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.1 மணியளவில் இது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சுமார் 107 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெருவுக்கு அருகில் அமைந்துள்ள ஈக்வடாரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
CATEGORIES உலகம்
