அஹுங்கல்ல பகுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

அஹுங்கல்ல பகுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (09) காலை 6.15 மணியளவில் சிவப்பு நிற ஸ்கூட்டரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுச் தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி புத்திக மானதுங்க தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் “லொக்கு பேடி” என்ற குற்றவியல் கும்பல் உறுப்பினரின் உறவினர் என்றும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This