
E8 விசா பிரிவின் கீழ் பணம் வசூலிக்கும் மோசடி
தற்போது செயல்பாட்டில் இல்லாத கொரிய E8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்து தனிநபர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் மோசடி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு அல்லது தொடர்புடைய பயிற்சிக்காக எந்தவொரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம், தனிநபர் அல்லது தனிநபர் குழுவிற்கும் இதுவரை எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை என்பதை பணியகம் அறிந்துள்ளது.
அதன்படி, எந்தவொரு வேலைவாய்ப்பு நிறுவனமோ, தனிநபரோ அல்லது தனிநபர் குழுவோ அத்தகைய செயலில் ஈடுபடுவதற்கு சட்டப்பூர்வ அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்று பணியகம் தெரிவித்துள்ளது.
CATEGORIES இலங்கை
TAGS E8 Visa scam
