துமிந்த சில்வா தேசிய வைத்தியசாலையில் அனுமதி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா திடீர் சுகவீனம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வா நேற்று முன்தினம் (10) இரவு சுகவீனம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பல மாதங்களாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்த துமிந்த சில்வாவை, மருத்துவக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, நேற்று காலை சிறைச்சாலையின் பொதுப் பிரிவுக்கு மாற்ற சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.