சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது டிப்பர் லொறி ஒன்று மோதியதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் புனேவின் வாகோலியில் நடந்துள்ளதாகவும், மேலும், இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை 12:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஜார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அமராவதியைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் அவர்கள் புனேவுக்கு வந்திருந்தனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் டிப்பரின் ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களி ஒரு வயது தொடக்கம் மூன்று வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக சசூன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இதேவேளை, மும்பையில் 19 வயது இளைஞர் ஒருவர் வேகமாக வந்த கார் மோதி நான்கு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

வடாலா பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரி அருகே இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பம் நடைபாதையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This