விமான நிலையத்தில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் தொகையுடன் இந்திய பிரஜை ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (05) காலை சுமார் 7.45 அளவில் ஏர் இந்தியா விமானம் AI-277 மூலம் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 10.75 கிலோகிராம் நிறையுடைய குஷ் போதைப்பொருளின் மொத்த மதிப்பு
105 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
விமான நிலைய சுங்க வளாகத்தில் அண்மையில் நிறுவப்பட்ட அதிநவீன ஸ்கேனரைப் பயன்படுத்தி இந்தப் குஷ் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.