
புகலிட கோரிக்கையாளர்களினால் பிரித்தானியாவுக்குள் போதைப் பொருள் ஆபத்து
புகலிட கோரிக்கையாளர்கள் மூலம் பிரித்தானியாவுக்குள் கணிசமாக போதைப் பொருள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
The Telegraph வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் உள்துறை அலுவலகம் மற்றும் தேசிய குற்றவியல் நிறுவனத்தின் அதிகாரிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சிறிய படகுகள் மூலம் பிரித்தானயாவுக்குள் நுழையும் புகலிட கோரிக்கையாளர்களினால் போதைப் பொருள் ஆபத்து கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பிரான்சிலிருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள், போதைப்பொருள் வில்லைகளை விழுங்கி, அவற்றை பிரித்தானியாவில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்கினால் போதைப் பொருளை கடத்தி வரும் புகலிட கோரிக்கையாளர்களுக்கு இலவச அல்லது குறைந்த விலையில் எல்லைய கடக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக்கைய் மற்றும் ஹெரோயின் கடத்த ஒப்புக்கொள்ளும் சில புகலிட கோரிக்கையாளர்கள் விசேட முறையில் எல்லையை கடக்கும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போதைப்பொருளை கடத்தும் குற்றவாளிகள் புலம்பெயர்ந்தோர் படகுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் இணைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் குடியேறிகள் தங்க வைக்கப்பட்டவுடன், கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்கள் பொதுவாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினர்களுக்கு கைமாற்றப்படுவதாக ஆட்கடத்தட்காரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் எல்லைகளை கடப்பதற்காக ஆட்கடத்தட்காரர்களும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களும் எவ்வாறு ஒன்றிணைந்துள்ளனர் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
