விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் – அரசாங்கம் அறிவிப்பு

விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வாகன இலக்கத்தகடுகள் மோட்டார் போக்குவரத்து பதிவுத் திணைக்களத்தால் (DMT) வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், பல்வேறு மென்பொருள் சேவை வழங்குநர்களால் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகள் தடைப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“வலைதள மேம்பாட்டிற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் 100 மில்லியன் ரூபா செலுத்திய சந்தர்ப்பங்கள் உள்ளன, எனினும் அதை ஐந்து மில்லியன் ரூபா செலவில் செய்திருக்கலாம்,” என்று அமைச்சர் கூறினார்.