
மது போதையில் அதி வேகத்தில் பேருந்தை செலுத்திய சாரதி கைது
ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான
பேருந்தின் சாரதி ஒருவர் மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் சாரதி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகளவான பயணிகளுடன் நேற்று மாலை 4 மணியளவில் குறித்த அரச பேருந்து அதி வேகத்தில் பயணிப்பதை அவதானித்த ஊர்காவற்றுறை போக்குவரத்து பொறுப்பதிகாரி சமன் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் பேருந்தை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
சோதனையின் போது சாரதியிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இருந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் அவர் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகின்றது.
இதனை அடுத்து சாரதியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
