மீண்டும் மிரட்ட வருகிறாள் ‘திரௌபதி 2’

மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திரௌபதி. இப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
வித்தியாசமான கதைக் களத்துடன் கலவையான விமர்சனங்களை இப் படம் பெற்றது.
இந்நிலையில் தற்போது இப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பில் இயக்குநர் வெளியிட்டுள்ள பதிவில்,
‘அவன் அருளாலே தாள் வணங்கி, தர்மம் காக்க உயிரை துச்சமென மாவீரர்களின் மறைக்கப்பட்ட வீர தீர ரத்த சரித்திரம்…இந்த ஆண்டு இறுதியில் ரிச்சர்ட் ரிஷி அவர்களின் நடிப்பில், ஜிப்ரான் இசையில் மீண்டும் திரையில் மிரட்ட வருகிறாள் திரௌபதி2’ என குறிப்பிடப்பட்டுள்ளது.