இந்தத் திசையில் செருப்பைக் கழற்றி வைக்க வேண்டாம்…வறுமை தொற்றிக்கொள்ளும்

இந்தத் திசையில் செருப்பைக் கழற்றி வைக்க வேண்டாம்…வறுமை தொற்றிக்கொள்ளும்

வீடுகளின் ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொரு விதமான வாஸ்து சாத்திரங்கள் உள்ளன. வாஸ்து சாத்திரத்தின்படி செருப்பை கழட்டி வைப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, ஒருவர் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது வாசலில் செருப்பைக் கழட்டி விட்டு வருவார்கள். ஒரு சிலர் செருப்புகளை வாசலில் அழகாக அடுக்கி வைப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு விதமாக செருப்புகளை கழட்டி வைப்பதால் பலரது வீடுகளில் வாஸ்து தோஷம் ஏற்படுகிறது.

இவ்வாறு வீட்டு வாசலில் செருப்பைக் கழட்டும்போது என்னென்ன விடயங்களை பின்பற்ற வேண்டும் எனப் பார்ப்போம்.

வீட்டின் பிரதான வாசலில் செருப்பைக் கழற்றக் கூடாது. பொதுவாக வீட்டின் வாசல் எந்தத் திசையில் அமைந்திருக்கிறதோ, அந்தத் திசைக்கு எதிர்த் திசையில் செருப்பைக் கழட்டி வைப்பது நல்லது.

வாஸ்து சாத்திரத்தின் அடிப்படையில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் செருப்புகளை கழட்டி வைக்கக்கூடாது. இது வீட்டுக்குள் எதிர்மறை சக்தியை அதிகப்படுத்தும்.

இத் திசைகளில் செருப்புகளை கழட்டி வைப்பதனால் வீட்டில் வறுமை அதிகரிக்கும். மேலும் வீட்டின் பெரியவர்கள் செருப்புகளை தலைகீழாக வைக்கக்கூடாது.

வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும்போது தெற்கு அல்லது மேற்கு திசையில் மட்டுமே செருப்பைக் கழற்றி வைக்க வேண்டும்.

Share This