தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்…கல்பனா விளக்கம்

பிரபல பாடகி கல்பனா மூன்று நாட்களுக்கு முன்னர் அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்ட காரணத்தினால் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக செய்திகள் பரவின.
அவர் தற்போது குணமடைந்து வரும் நிலையில் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “நானும் எனது கணவரும் மகளும் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். எங்கள் குடும்பத்தை பற்றி தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் தற்போது முனைவர் பட்டமும், எல்.எல்.பி பட்டமும் படித்து வருகிறேன்.
தொழில்ரீதியாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக தூக்கமின்றி தவித்தேன். இதனால் மருத்துவர்கள் பரிந்துரைத்தப்படி மாத்திரைகள் உண்டு வந்தேன்.
சம்பவ தினத்தன்று கொஞ்சம் அதிக மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன். இதன் காரணமாகத்தான் மயங்கி விழுந்தேன்.
என் கணவர் தான் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து பொலிஸாரின் உதவியுடன் என்னைக் காப்பாற்றினார்.
அதனாலேயே நான் தற்போது குணமாகி வருகிறேன். இனி வரும் காலங்களில் பாடல்களால் உங்களை மகிழ்விப்பேன்” எனக் கூறியுள்ளார்.