‘ரணிலின் முடிச்சில் சிக்கிக் கொள்ளாதீர்கள்’- கண்டனப் போராட்டம் நாளை
![‘ரணிலின் முடிச்சில் சிக்கிக் கொள்ளாதீர்கள்’- கண்டனப் போராட்டம் நாளை ‘ரணிலின் முடிச்சில் சிக்கிக் கொள்ளாதீர்கள்’- கண்டனப் போராட்டம் நாளை](https://oruvan.com/wp-content/uploads/2025/02/ranil-wickremesinghe-and-sajith-premadasa.jpg)
‘ரணிலின் முடிச்சில் சிக்கிக் கொள்ளாதீர்கள்’ என்ற தொனிப்பொருளில் சஜித் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்துள்ள கண்டனப் போராட்டம் நாளை (08) இடம்பெறவுள்ளது.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைமையகத்தில் நாளை (08) காலை 10 மணிக்கு இந்த கண்டனப் பேரணி இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அமைப்பதற்கு எதிராக இந்தக் கண்டன போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பலர் கலந்துக் கொள்ளவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
குறித்த கண்டனப் போராட்டம் தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்துக்கொள்ள 071 6631043 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு சஜித் பாதுகாப்பு இயக்கம் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.