தன் மீது அவதூறு பரப்பும் செய்திகளை நம்ப வேண்டாம் – டிரான் அலஸ் கோரிக்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தான் மறைத்து வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் நகைச்சுவையாக உள்ளதாக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
நாட்டையே சிரிக்க வைக்கும் இது போன்றவர்கள், இவ்வாறான பிரசாரங்களை வெளியிட்டு, தன்னைப் பற்றி தவறான விடயங்களை பரப்பி வருவதாக சமூகத்தை தவறாக வழிநடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
எனினும், இவ்வாறான தவாறான பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை, முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மறைத்து வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் கேள்வியெழுப்பும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.