இஸ்ரேலை சென்றடைந்தார் டொனால்ட் டிரம்ப்

இஸ்ரேலை சென்றடைந்தார் டொனால்ட் டிரம்ப்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார்.

இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு வந்த டொனால்டு டிரம்ப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார்.

ஹமாஸ் ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் முதல் தொகுதியை விடுவித்துள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.

காசா சமாதான உச்சிமாநாட்டிற்காக எகிப்துக்குச் செல்வதற்கு முன்பு, பணயக்கைதிகளின் குடும்பத்தினரை டிரம்ப் சந்தித்து இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஹமாஸ் தங்கள் வசம் உள்ள 20 இஸ்ரேலிய பணய கைதிகளை இன்று விடுதலை செய்கிறது.

முதற்கட்டமாக ஏழு பணய கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பணய கைதிகள் இன்னும் சற்று நேரத்தில் விடுதலை செய்யப்பட்ட உள்ளனர்.

மேலும், ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்ட மேலும் 28 இஸ்ரேலிய பணய கைதிகளின் உடல்களும் இன்று ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Share This