விராட் கோலியின் ஆர்சிபி இல்லை… ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான அணி எது தெரியுமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது பதிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளது. இதற்கான மெகா ஏலம் கடந்த மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடந்து முடிந்துள்ளது.
ஒவ்வொரு அணிகளும் தங்களுக்க தேவையான வீரர்களை பெருந்தொகை கொடுத்து வாங்கியுள்ளனர். இந்நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடர் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மிகவும் வெற்றிகரமான அணிகள் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்விரு அணிகளும் தலா ஐந்து முறை கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
ஆனால் ஐபிஎல் வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்து மிகவும் மோசமான அணி என்ற பெயரை ஒரு அணி பெற்றுள்ளது.
இது எல்லோரும் எதிர்ப்பார்க்கும் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) இல்லை.
2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்களில் விளையாடி வந்தாலும், பெங்களூரு அணி இன்னும் பட்டத்தை வெல்லவில்லை. இரண்டு முறை இரண்டாம் இடம்பிடித்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கில் மிகவும் மோசமான அணி உண்மையில் டெல்லி கேபிடல்ஸ் ஆகும். டெல்லி அணி இதுவரையில் ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
2020ஆம் ஆண்டு மும்மை அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் டெல்லி அணி விளையாடியிருந்தது.
டெல்லி கேபிடல்ஸ் இதுவரை ஐபிஎல் பட்டத்தை வென்றதில்லை என்பதுடன், 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளில் பிளேஓப் சுற்றுக்கு கூட தகுதிபெறவில்லை.
உண்மையில், ஐபிஎல் 2020 இல் இறுதிப் போட்டிக்கு தெரிவானதற்கு முன்னர் நான்கு முறை மட்டுமே (2008, 2009, 2012 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில்) பிளேஓப் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அப்படியானால் ஐபிஎல்லில் அதிக போட்டிகளில் தோல்வியடைந்த அணி எது?
இந்த விடயத்தில் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு சொந்தமான பஞ்சாப் கிங்ஸை டெல்லி கேப்பிட்டல்ஸ் பின்னுக்கு தள்ளியுள்ளது.
இதுவரை 252 போட்டிகளில், டெல்லி கேபிடல்ஸ் (முன்னதாக டெல்லி டேர்டெவில்ஸ்) 134 போட்டிகளில் தோல்வியடைந்து 112 ஆட்டங்களில் வெற்றி பெற்று 44.44 என்ற வெற்றி சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது.
டெல்லி அணிக்கு அடுத்தபடியாக பஞ்சாப் கிங்ஸ் 246 போட்டிகளில் 133 ஆட்டங்களில் தோல்வியடைந்து 109 போட்டியில் வென்று 44.3 என்ற வெற்றி சதவீதத்துடன் அடுத்த இடத்தில் உள்ளது.
பஞ்சாப் அணி கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிளேஓப் கட்டத்தை எட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சாதனை என்ன?
பெரிய நட்சத்திர வீரர்களை கொண்ட ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் கிண்ணத்தை வென்றிருக்கவில்லை என்றாலும், மற்ற இரு அணிகளை விட சற்று சிறந்த சாதனையை அவர்கள் பெற்றுள்ளனர்.
256 போட்டிகளில், 121 ஆட்டங்களில் வெற்றியும், 128ல் தோல்வியும் அடைந்து 47.26 சதவீதத்தை கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் இதுவரை 239 போட்டிகளில் 138 வெற்றிகள் மற்றும் 98 தோல்விகளுடன் மிக வெற்றிகரமான அணியாக உள்ளது.
252 போட்டிகளில் 130 வெற்றிகள் மற்றும் 117 தோல்விகளுடன் நடப்பு சம்பியனர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாவது வெற்றிகரமான அணியாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.