பச்சை நிறப் பாம்பு கனவில் அடிக்கடி வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

கனவில் கூட பாம்புகளைக் கண்டால் நமக்கு பயம் ஏற்படத்தான் செய்யும். அந்த வகையில் பாம்புகள் கனவில் வந்தால் கெட்டது நடக்கும் என ஒரு சிலர் பயப்படுவார்கள். உண்மையில் பாம்புகள் கனவில் வந்தால் நல்லதும் நடக்கும்.
ஆனால், அந்த நன்மையும் தீமையும் பாம்பு என்ன நிறத்தில் நம் கனவுகளில் தோற்றமளிக்கின்றது என்பதைப் பொறுத்ததுதான்.
பச்சை பாம்பு – கனவில் பச்சை நிற பாம்பு வருவது வளர்ச்சி, செழிப்பு போன்றவற்றைக் குறிக்கும். இது உங்கள் வாழ்வில் நடக்கப்போகும் நல்ல மாற்றத்துக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. மேலும் பச்சைப் பாம்புகள் ஆரோக்கியம் மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிப்பதால் உங்களுக்கு நல்லது நடக்கும்.
மஞ்சள் பாம்பு – மஞ்சள் பாம்பு கனவில் வருவது நமக்கு எச்சரிக்கையாக இருக்கும். பொதுவாக மஞ்சள் பாம்பு துரோகம், ஏமாற்றம், பொறாமை, எதிர்மறை ஆகியவற்றைக் குறிக்கும். எனவே இந்த நிற பாம்பு வந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கருப்பு பாம்பு – கருப்பு பாம்பு கவலை, மன அழுத்தம், பயம், எதிர்மறை உணர்வுகளை குறிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் கெட்டதை இது உணர்த்துகிறது. எனவே கருப்பு பாம்பு கனவில் வந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வெள்ளை பாம்பு – வெள்ளை பாம்பு கனவில் வந்தால் அது நல்ல சகுனம். இது தூய்மை, அமைதி, ஆன்மீகம், நல்ல நேரம் ஆகியவற்றையும் உணர்த்தும். எனவே வெள்ளைப் பாம்பு கனவில் வந்தால் நல்ல காலம் ஆரம்பம் என்று அர்த்தம்.