பெண்களுக்கு வலது கண் துடித்தால் என்ன நடக்கும் தெரியுமா…சாஸ்திரம் கூறுவது என்ன?
கண்கள் துடிப்பதைக் கொண்டு வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரும் எனக் கூறுவார்கள். அந்த வகையில் கண்கள் துடிப்பது குறித்து சாஸ்திரம் என்ன கூறுகிறது எனப் பார்ப்போம்.
பெண்களுக்கு வலது கண் துடித்தால் கெட்ட சகுனம். கீழ் இமை துடித்தால் கணவருக்கு பிரச்சினை ஏற்படும். வெவ்வேறு விதத்தில் கெட்ட செய்திகள் வரும்.
ஆண்களுக்கு வலது கண் துடித்தால் மங்களம். வலது கண் புருவம் துடித்தால் புகழ் மற்றும் பெருமை ஏற்படும். நம்பிக்கை மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது.பெண்களுக்கு இடது கண் பகுதி துடித்தால் நல்ல சகுனம். அதுவே இடது கண் துடித்தால் நன்மை. இடது கண் பகுதி முழுவதுமாக துடித்தால் புகழ் மற்றும் செல்வம் தேடி வரும். இடது கண்ணின் மேல் இமைப்பகுதி துடித்தால் தற்போதிருக்கும் பிரச்சினைகள் விலகும்.
ஆண்களுக்கு இடது கண் துடித்தால், கஷ்டக் காலம். ஆண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.