கருட தரிசனத்தின் பலன்கள் தெரியுமா?

பகவான் நாராயணனின் வாகனமான கருடனுக்கு ஞானம், ஐஸ்வர்யம், பலம், சக்தி,தேஜஸ்,வீரியம் எனும் ஆறு குணங்கள் உண்டு. அதன்படி ஆயிரம் சுப சகுணங்கள் கிடைத்தாலும் அது ஒரு கருட தரிசனத்துக்கு இணையாகாது என்று கூறப்படுகிறது.
அத்தகைய கருட தரிசனத்தின் பலன்களைப் பார்ப்போம்.
சூரியன் உதயமாகு்போது கருட தரிசனம் செய்தால் நினைத்தவை நிறைவேறும். அதன்படி கருடன் வானத்தில் பறப்பதும் அதன் குரலைக் கேட்பதும் பல நன்மைகளைக் கொடுக்கும்.
அதன்படி ஏழு நாட்களில் எந்தெந்த நாட்களில் கருட தரிசனம் கிடைத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப் பார்ப்போம்.
- திங்கட்கிழமை கருடனை தரிசித்தால் குடும்ப கஷ்டம் நீங்கி மகிழ்ச்சி கிட்டும்.
- செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் கிடைத்தால் பயம் நீங்கி தைரியம் உண்டாகும்.
- புதன்கிழமை கருட தரிசனம் கிடைத்தால் எதிரிகள் அழிந்துபோவார்கள்.
- வியாழக்கிழமை கருடனை தரிசித்தால் கண்டங்கள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும்.
- வெள்ளிக்கிழமை கருடனை தரிசித்தால் லக்ஷ்மி கடாட்சம் கிடைப்பதோடு ஆபரணங்கள் சேரும்.
- சனிக்கிழமை கருடனை தரிசித்தால் நமது கர்ம வினைகள் நீங்கி மோட்சம் கிடைக்கும்.
- ஞாயிற்றுக்கிழமை கருடனை தரிசித்தால் நோய்கள் நீங்கும்.