கறுப்பு நிற செல்லப் பிராணிகள் துரதிர்ஷ்டத்தை துரத்துமா?

கறுப்பு நிற செல்லப் பிராணிகள் துரதிர்ஷ்டத்தை துரத்துமா?

பொதுவாக கறுப்பு நிறம் கண் திருஷ்டியை எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுவதுண்டு. அதன்படி வீட்டில் கறுப்பு நிற செல்லப் பிராணிகளை வளர்ப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப் பார்ப்போம்.

சில வீடுகளில் வளர்க்கப்படும் கறுப்பு நிற ஆடு, மாடு, கோழி போன்றவற்றை சில காலத்துக்குப் பின்னர் கோவிலுக்கு நேர்ந்து விடுவதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறு செய்வதனால் வீட்டில் இருந்த கண் திருஷ்டி போன்றவை விலகிவிடும் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் வீட்டில் வளர்க்கும் மீன்களில் சில மீன்கள் இறந்துவிடும். அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் தன் எஜமானனுக்கு வரவிருக்கும் பெரிய ஆபத்தை அது வாங்கிக் கொள்ளும் எனக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கறுப்பு நிற மீன்கள் வளர்ப்பது விசேஷமானது.

அதன்படி கறுப்பு நிற செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் துரதிர்ஷ்டம் நம் நெருங்காது. அத்துடன் நம்மிடமிருக்கும் தோஷங்களையும் நீக்கும்.

CATEGORIES
TAGS
Share This