
சிறுபான்மையின மக்களுக்கு துணையாக திமுக இருக்கும் – மு.க.ஸ்டாலின்
சிறுபான்மையின மக்களுக்கு துணையாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் விழா நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது 3,250 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் சர்வதிகார சக்திகளை எதிர்க்கும் திறன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையின மாணவர்களுக்காக 14 கல்லூரி விடுதிகளில் நூலகம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு கருவிகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைக்கு சிறுபான்மையின மக்கள் எத்தகைய அச்ச உணர்வோடு வாழ்கிறார்கள்.
இந்த நாட்டின் குடிமக்களுக்கே அச்சத்தை வரவைக்கும் சர்வதிகார சக்திகளை எதிர்க்கும் திறன் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே இருக்கினறது.
உங்களுக்கு துணையாக திமுகவும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் உறுதியாக இருக்கும்.
அதேபோல், நீங்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதேவேளை, 2.87 கோடியில் 44 தேவாலயங்கள் புனரமைப்பு உட்பட பல்வேறு திட்டங்களை தனது அரசாங்கம் செயல்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
