”மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடுகிறது” – அமித் ஷா குற்றச்சாட்டு

மொழியின் பெயரால் சிலர் நாட்டை பிளவுப்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திமுக மீது குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு துவங்கி நடைபெற்றுவருகிறது.
இதில், பல்வேறு விடயங்கள் குறித்து விவாதங்கள் எழுந்துவருகின்றன. இரண்டாம் கூட்டத் தொடர் துவங்கிய அன்றே திமுக உள்ளிட்ட தமிழ்நாடு எம்.பி.க்கள் தமிழ்நாட்டிற்கான நிதியைக் கேட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது.
அதேபோல், நேற்று தமிழ்நாடு எம்.பி.க்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிராக வாசகங்கள் பொறித்த டி-சர்ட் அணிந்து நாடாளுமன்றத்திற்குச் சென்றனர். இதனைத் தொடர்ந்து பெரும் அமளி ஏற்பட்டு நாடாளுமன்றம் முழு நாளும் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே திமுகவை மொழி பிரச்சினையால் நாட்டை பிளவுப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார் அமித் ஷா.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பொறியியல், மருத்துவப் புத்தகங்களை தமிழில் வெளியிடுவோம் என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.