
தீபாவளி பண்டிகை யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைப்பு
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இன்று இணைக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கிய கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருவமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் 20 மாநாடு தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டை இந்தியா நடத்துவது இதுவே முதன்முறையாகும்.
இந்த குழு அமர்வு டிசம்பர் 08 ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் 13 ஆம் திகதி நிறைவடைகிறது.
டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
தீபாவளிக்கு முன்னரே இந்தியாவின் பல முக்கிய நிகழ்வுகள் யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES உலகம்
