மதுவரித் திணைக்களத்தின் வருமான சேகரிப்பு, மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் செயன்முறை குறித்து கலந்துரையாடல்

மதுவரித் திணைக்களத்தின் வருமான சேகரிப்பு, மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் செயன்முறை குறித்த கலந்துரையாடல்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

மதுவரித் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் வருமான சேகரிப்பை அதிகரிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், டிஜிட்டல் மயமாக்கல், புதிய மறுசீரமைப்புகள் மற்றும் நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன. டிஜிட்டல் மயமாக்கலின் செயல்திறனை அதிகரித்தல், மனிதவள மேம்பாடு மற்றும் அதிகாரிகளின் நலன்புரி நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த முயற்சிகள் வெற்றிபெற தொழிற்சங்கங்களின் ஆதரவை வழங்குவதன் முக்கியத்துவமும் இந்தக் கலந்துரையாலில் வலியுறுத்தப்பட்டது.

மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம். பி. என். ஏ. பிரேமரத்ன, மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரச வருமான நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணியகத்தின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )